E-CITY AWARD CEREMONY 2019 - Album

ஈ-சிற்றி கல்லூரியின் விருது வழங்கும் விழா சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இயங்கிவரும் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் இன்று 12.01.2020 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. கல்லூரியின் அதிபர் தேசகீர்த்தி லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவேல் ஆர்னோட், யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வித் துறைத் தலைவர் கலாநிதி ஜெயலஷ்மி இராசநாயகம் ஆகியோரும் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் அவர்களும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் சர்வமத தலைவர்களின் ஆசியுரைகளுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. இதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாடநெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான பதக்கங்களை பிரதம விருந்தினர் எம்.ஏ.சுமந்திரன் வழங்கி வைத்துடன் டிப்ளோமா சான்றிதழ்களை யாழ் பல்கலைக்கழக கல்வித் துறைத் தலைவர் தலைவர் கலாநிதி ஜெயலஷ்மி இராசநாயகம் அவர்களும் வழங்கி வைத்தனர். நிகழ்வில் மதத் தலைவர்கள், கல்விமான்கள், பொது மக்கள், மாணவர்கள் எனப் பெருந்தொகையானோர் கலந்து கொண்டிருந்தனர்.