E-CITY AWARD CEREMONY- 2017 - Album

ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா சிறப்பாக இடம்பெற்றது! யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இயங்கி வரும் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் 01.10.2017 அன்று கல்லூரியின் அதிபர் தேசமானிய லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது. ஆங்கில டிப்ளோமா பாடநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 200 மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பாடநெறியில் சிறப்புத் தேர்ச்சி அடைந்த நாற்பது மாணவர்களுக்கு தங்க மெடல்கள் மற்றும் சமூக சேவையாற்றிய ஐந்து சேவகர்களுக்கு சமூகசேவை விருதுகள் மற்றும் கௌரவங்களும் வழங்கப்பட்டன. இவர்களுக்கான சான்றிதழ்கள்,விருதுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் குடிசார் எந்திரவியல் துறைத்தலைவர் எந்திரவியலாளர் Dr.S.சிவகுமார் அவர்கள் வழங்கிக் கௌரவித்தார். இந்த நிகழ்வில் ஆசி உரைகளை சின்மய மிசனின் வதிவிட ஆச்சாரியார் வணக்கத்திற்குரிய பிரமச்சாரி ஜாக்ரட் சின்மய அவர்கள், யாழ்ப்பாணம் நாகவிகாரை சர்வதேச பௌத்த நிலையத்தின் தேரர் வணக்கத்திற்குரிய சிறிவிமல தேரர் அவர்களும், யாழ்ப்பாணம் பெரிய தேவாலயத்தின் குரு வணக்கத்திற்குரிய எல்மோ அடிகளாரும், யாழ்ப்பாணம் கிளிநொச்சி உலமா சபையின் தலைவர் மௌலவி வணக்கத்திற்குரிய A.M.A.Azees ஹஸ்மி அவர்களும் வழங்கி நிகழ்வை சிறப்பாக ஆரம்பித்து வைத்தனர். பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் எந்திரவியல் பிரிவின் தலைவர் கலாநிதி சிவகுமார் சுப்பிரமணியம் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரியின் அதிபர் திருமதி மிமலாதேவி விமலநாதன் அவர்கள் மற்றும் கௌரவ விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ சந்திரலிங்கம் சுகிர்தன் அவர்களும், கல்லூரியின் பணிப்பாளர்கள் தேசபந்து கீர்த்திசிறி டாக்டர் க.ஜெயச்சந்திரமூர்த்தி (சமாதான நீதவான்) , டாக்டர் அ.ஜெயக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.