யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த சான்றிதல் வழங்கும் நிகழ்வும் கடந்த 01.02.2025 யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஈ-சிற்றி கல்லூரியின் தலைவர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்களின் ஆட்சியுடன் 265 மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வின் பிரதம விருந்தினராக மீன்பிடியியல் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர், சிறப்பு விருந்தினராக சிரேஷ்ட பேராசிரியர். தி.வேல்நம்பி சிரேஷ்ட இருக்கைப் பேராசிரியர் பீடாதிபதி/ உயர் பட்டப்படிப்புகள் பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் S.நித்தியரூபன், யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணநாதன் இளங்குமரன், கல்லூரியின் இயக்குனர்கள் வைத்தியர்கள் க. ஜெயச்சந்திரமூர்த்தி, அ. ஜெயக்குமார் ஆகியோர் பங்குபற்றி நிகழ்வைச் சிறப்பித்தனர். திருமதி மயூரிக்கா றஜீவனின் நெறிப்படுத்தலில் சிறப்புக் கேடயங்கள் (ஞாபகார்த்த விருதுகள்) பணப் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் 15 வது ஆண்டு நிறைவு விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.






















































































































