இலங்கைத் தீவு முழுவதுக்குமான ஒரு சமாதான நீதவானாக நியமனம்
Posted on:
2019-07-29 04:49:00
சமூக சேவையாளர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் சமாதான நீதவானாக நியமனம்
தேசமானிய லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் இலங்கைத் தீவு முழுவதுக்குமான ஒரு சமாதான நீதவனாக மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் அவர்கள் முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசையார் கல்லூரி, கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் உப அதிபராகவும், யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் அதிபராகவும் சர்வதேச லயன்ஸ் கழகங்களின் இலங்கை மாவட்டம் 306B1 ன் GST இணைப்பாளராகவும் வடமாகாண புதிய அதிபர்கள் சங்கத்தின் தலைவராகவும் வேறு பல சமூக நிறுவனங்களில் பல் வேறு பொறுப்புக்களையும் வகித்து வருகிறார்.
இவர் தனது க. பொ. த உயர்தரப் பரீட்சையின் (விஞ்ஞான பாடம்) பின்னர் இலங்கை உயர் தொழிநுட்ப நிறுவனத்தில் ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா (HNDE பாடநெறியைப் பயின்று ), பின்னர் இலங்கையின் களுத்தறை பஸ்துன்ரட்ட தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆங்கில பாடத்தில் தேசிய டிப்ளோமா சான்றிதழில் திறமைச் சித்தி (Merit), இலங்கையின் தேசிய கல்வி நிறுவகத்தில் (National Institute of Education) தனது கல்விமானிப் படிப்பை B.Ed (Bachelor of Education) ஆங்கில பாடத்தில் நிறைவு செய்து, தற்போது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தனது கல்வி முதுமாணி M.Ed (Master of Education) பட்டப்படிப்பை பயின்று வருகிறார்.
இலங்கை அதிபர் சேவைப் பரீட்சையில் (Srilanka Principal Service) அதிகூடிய புள்ளிகள் பெற்றன் காரணமாக இலங்கை மத்திய கல்வி அமைச்சால் தெரிவு செய்யப்பட்டு இலங்கை அரசின் புலமைப் பரிசிலில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் பாடசாலை முகாமைத்துவம் மற்றும் உயர் தலைமத்துப் பயிற்சிகளையும்,
இந்திய அரசாங்கத்தின் முழுமையான புலமைப் பரிசில் பெற்று இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் மனிதவள முகாமைத்துவப் பாடநெறியையும், சர்வதேச லயன்ஸ் கழகங்களின் தலைமையகத்தால் தெரிவு செய்யப்பட்டு நேபாளத்தன் தலைநகர் காத்மண்டுவில் தனது உயர் தலைமத்துவப் பயிற்சியினையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆங்கில மொழியில் சிறந்த புலமையைக் கொண்டதுடன் சிங்கள மொழியில் நல்ல ஆளுமையும் உடையவர்.
இதற்காப்பால் உள்நாட்டில் பல தலைமைத்துவ, முகாமைத்துவ பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக முடித்தவர்.
இலங்கை லயன்ஸ் கழகங்களில் சிறந்த ஆளுமை உடையவர். லயன்ஸ் கழகத்தில் தலைவராக, வலயத் தலைவராக, பிராந்திய தலைவராக, பிராந்திய இணைப்பாளராக பல பதவிகளை வகித்தவர்.
மேலும் இவரின் கல்வி, சமூக, மனிதாபிமான சேவைகளைப் பாராட்டி தேசிய விருதுகளான சாமசிறி தேசகீர்த்தி மற்றும் மனித உரிமைகள் காப்பகத்தால் தேசமானிய பட்டங்களும் வழங்கப்பட்டது.
வேலணை ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த மருத்துவரும் சமாதான நீதவானுமான லயன் Dr.K.ஜெயச்சந்திரமூர்த்தி, மேரிமெற்லின் தம்பதியரின் இரண்டாவது புதல்வனுமாவார்.