இலங்கைக்கு நேர்க் கோட்டில் சூரியன் காணப்படுவதால் தற்போது நாட்டில் வீசும் காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதாகவும் அந்நிலையம் தெரிவித்தது.
Posted on:
2017-04-06 13:16:31
இலங்கைக்கு நேர்கோட்டில் சூரியன் காணப்படுவதால் நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை எதிர்வரும் 15ம் திகதி வரை நீடிக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
தற்போது நாட்டின் பல பிரதேசங்களில் 30 செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுவதாகவும் இன்று பிற்பகல் 12.15 மணியளவில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சூரியன் நேராகக் காணப்படும் என்றும் அந்த மாவட்டத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் மேற்படி நிலையம் தெரிவிக்கின்றது. இந்த வெப்பநிலை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும்
15 ம் திகதி காணப்படுவதோடு அத்துடன் வெப்பநிலை தணிந்து விடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.
இலங்கைக்கு நேர்க் கோட்டில் சூரியன் காணப்படுவதால் தற்போது நாட்டில் வீசும் காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதாகவும் அந்நிலையம் தெரிவித்தது.
இதேவேளை, மேற்கு மற்றும் தென் மாகாணத்தின் சில பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் மழைபெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.