கல்வியில் அதிக பட்டங்களை வைத்திருப்பதன் மூலம் மற்றவர்கள் மத்தியில் தம்மை உயர்ந்தவர்களாகவும் காட்டிக் கொள்கின்றோம்.
Posted on:
2017-03-16 23:44:23
புத்தகப் பூச்சிகள் ஆளுமையானவர்களாக ஒருபோதும் உருவாக மாட்டார்கள்.
தனியே பாடங்களைப் படித்து பலர் தங்கள் கல்வித்தகமைகளை உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள்.
கல்வியில் அதிக பட்டங்களை வைத்திருப்பதன் மூலம்
மற்றவர்கள் மத்தியில் தம்மை உயர்ந்தவர்களாகவும் காட்டிக் கொள்கின்றோம்.
அது மிகச்சிறந்த விடயம்!
ஆனால் அந்தக் கல்வி மூலம் ஆளுமையான ஒருவராக பலருக்கு வர முடியவில்லை.
வாழ் நாள் காலம் முழுவதும் பலர் சதா படித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அப்படிப் படிப்பவர்கள் பலருக்கு சமூகத்தில் நடக்கும் பல்வேறு விடயங்களில் ஈடுபடுவது கிடையாது.
ஒருவர் தன்னுடைய ஆளுமையை நிரூபிக்க வேண்டுமானால், அவர் சமூகத்தில் பல்வேறு விதமான விடயங்களில் ஈடுபட்டு தன்னுடைய திறமைகளை வளர்ப்பதன் மூலமே
தான் பெற்ற கல்விக்கும் தன்னுடைய ஆளுமைக்கும் இடைத் தொடர்பைக் காண முடியும்.
அதிகம் படித்தவர்கள் தம்மை எப்போதும் பாதுகாப்பாகவே வைத்திருக்க விரும்புகின்றார்கள்.
அதன் காரணமாகவும் பலர் சமூகத்தில் இறங்கி வேலை செய்ய முற்படுவதில்லை.
அப்படியாவர்களால் சமூகத்திற்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.
எனவே மாணவர்கள் தங்களை ஆளுமையானவர்களாக உருவாக்கக்கூடிய கல்வியைக் கற்க வேண்டும்.
அப்போது தான் சமூகம் சிறந்த முறையில் பயன்பெறும்.
படித்தவர்களில் பலர் சிறந்த சுயநலவாதிகளாக இருப்பதை பல சந்தர்ப்பங்களில் அவதானித்து வருகின்றேன் என யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் தலைவரும் யாழ் இந்து மகளிர் கல்லூரியின் உப அதிபருமான தேசகீர்த்தி லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் மாணவர்களுக்கான நிகழ்வொன்றில் தெரிவித்தார்.