யாழ் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா சிறப்பாக இடம்பெற்றது!


கல்வியே எங்கள் பலம்! ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் கலாநிதி நா.சண்முகலிங்கன் வலியுறுத்தினார். மிகவும் சிறப்பாக நடைபெற்ற விழாவையும் மனம் நெகிழ்ந்து பாராட்டினார் பேராசிரியர். தனது அப்பப்பா ஒரு விவசாயி, அப்பா ஆசிரியர் எனவும் கல்வியே தனக்கு சிறப்பைத் தந்தது எனவும் தெரிவித்தார்.

Posted on:
2018-11-04 03:58:23

யாழ் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா சிறப்பாக இடம்பெற்றது!

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இயங்கி வரும் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் 03.11.2018 அன்று கல்லூரியின் அதிபர் தேசமானிய லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.

ஆங்கில, சிங்கள, கணனி டிப்ளோமா பாடநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ்களும், பாடநெறியில் சிறப்புத் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு தங்க மெடல்கள் என்பன வழங்கப்பட்டன. இவர்களுக்கான சான்றிதழ்கள்,விருதுகளை நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் கலாநிதி நா சண்முகலிங்கன் அவர்களும் அவரது பாரியார் திருமதி கௌரி சண்முகலிங்கன் ஆகியோர் வழங்கிக் கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் ஆசி உரைகளை வீணாகான குருபீடத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய சிவசிறி வாசுதேவக் குருக்கள், யாழ்ப்பாணம் நாகவிகாரை சர்வதேச பௌத்த நிலையத்தின் தேரர் வணக்கத்திற்குரிய சிறிவிமல தேரர், யாழ்ப்பாணம் பெரிய தேவாலயத்தின் குரு வணக்கத்திற்குரிய அன்ரன் டெனீசியஸ், யாழ்ப்பாணம் கிளிநொச்சி உலமா சபையின் தலைவர் மௌலவி வணக்கத்திற்குரிய A.M.A.அஸீஸ் ஹஸ்மி அவர்களும் வழங்கி நிகழ்வை சிறப்பாக ஆரம்பித்து வைத்தனர்.

பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் கலாநிதி நா.சண்முகலிங்கன் அவர்களும் அவரது பாரியார் திருமதி கௌரி சண்முகலிங்கன், கல்லூரியின் பணிப்பாளர்கள் தேசபந்து கீர்த்திசிறி டாக்டர் க.ஜெயச்சந்திரமூர்த்தி (சமாதான நீதவான்) , டாக்டர் அ.ஜெயக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.