Award-Ceremony-2016 E-CITY AWARD ceremony 2016 which was held at Saraswathy Hall on 06.11.2016, headed by Desha Keerthi Lion.Jeyachandramoorthy Rajeevan(SLPS III). Prof.Dr.P.Balasundrampillai participated as the Chief Guest of the ceremony and Awarded for the students those who have completed the Courses DIPLOMA IN ENGLISH. E-CITY AWARD CEREMONY - 2016 at Saraswathy Hall 6 November 2016 · ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது! ஆங்கிலக் கற்கை நெறிகளுக்கு இலங்கையில் புகழ்பூத்த யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் 05.11.2016 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் தேசகீர்த்தி லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான கலாநிதி பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக மருத்துவரும் சமாதான நீதவானுமான டாக்டர் க.திருலோகமூர்த்தி அவர் பாரியார் டாக்டர் அமிர்தகௌரி திருலோகமூர்த்தி, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லைலாராணி செல்வக்கடுன்கோ, கல்லூரியின் பணிப்பாளர் கீர்த்திசிறி தேசபந்து பன்டிட் டாக்டர் லயன் க.ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். சர்வ மதத் தலைவர்களான வீணாகான குருபீடத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய சன்னிதாச்சாரியார் ஆன்மீகப் பேரொளி சபாசிறி வாசுதேவக் குருக்கள், விகாராதிபதி வராபிட்டிய ஹவப்பதி தேரோ, குருமுதல்வர் வண.ரெணோல்ட் ஜோர்ச் அடிகளார், யாழ்ப்பாணம் - கிளிநொச்சி உலாமா சபைத் தலைவர் மௌலவிஅஸீஸ் ஆகியோர் தமது ஆசிச் செய்திகளை வழங்கி நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். ஆங்கில டிப்ளோமா பாடநெறிகளைப் பூர்த்தி செய்த இருநூறு மாணவர்களுக்கான ஆங்கில டிப்ளோமா சான்றிதழ்களை நிகழ்வின் பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான கலாநிதி பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் வழங்கிக் கௌரவித்து வைத்தார். மேலும் இந்த நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி மற்றும் சமூக மறுவாழ்வுக்கான அமைப்பு என்பன இணைந்து சமூகத்தில் கல்வி, கலை, கலாச்சாரம், சமயம் மற்றும் சமூகசேவை போன்ற பணிகளுக்கு உன்னத சேவையாற்றும் எட்டு பெருமக்களுக்கு “தேசாபிமாணி” என்ற கௌரவ விருது வழங்கிக் கௌரவப்படுத்தியது. இவர்களுக்கான கௌரவத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான கலாநிதி பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் பொன்னாடை போர்த்தி விருது வழங்கிக் கௌரவித்து வைத்தார். தாம் வாழும் சமூகத்திற்கு உன்னத சேவை புரியும் செந்தமிழ் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன், கலாகீர்த்தி சாந்தினி சிவநேசன், திரு.செல்வராசா சந்திரகுமார், சுதேச மருத்துவர் அழகேந்திரம் ஜெயக்குமார், லயன் பெண்மணி தவானந்தி சந்திரகாந்தன், M.U.M.தாஹீர், திரு.யோகதாசன் யூட் நிமலன், திரு.சிவசுப்பிரமணியம் ஜெயசங்கர் ஆகியோருக்கு “தேசாபிமானி” என்ற கௌரவ விருது வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்வுகளைத் தொடர்ந்து கல்லூரியின் வெளிநாட்டு ஆங்கிலப் பரீட்சைகள் மற்றும் பாடநெறி இணைப்பாளர் திருமதி லயன் மயூரிக்கா றஜீவன் அவர்களின் நன்றியுரையுடன் விருது வழங்கும் விழா சிறப்புற நிறைவு பெற்றது.